Tuesday, January 26, 2010

புல்லறிவாளரைப் போற்றாதீர்!

செல்வம் கருதிச்
சிலர்பலர் வாழ்வு எனும்
புல்லறிவாளரைப்
போற்றிப் புலராமல்,
இல்லம் கருதி
இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கு எய்த
விற்குறி ஆமே.


சிலருக்கும் பலருக்கும் செல்வ வாழ்வு தருகிறோம் என்று
சொல்லிச் செல்வோரின் அழிகின்ற செல்வத்தைக் கருதி
வாழ்த்தி வாடாதீர்!

வில்வீரன் செலுத்தும் அம்பானது இலக்கைத் தவறாது அடைவது போல,
வீடு, பேற்றை அளிக்கும் இறைவனை வணங்கி வாழ்த்தினால்,
உங்களது வறுமையைத் தவறாது நீக்கி இன்பம் தருவான்.


-அறம் செய்யான் திறம், திருமந்திரம் (269)

4 comments:

  1. நல்லா அழகா சொல்லிருக்கீங்க

    ReplyDelete
  2. விளக்கம் நல்லா இருக்கு. நல்லதை உணர்த்தும்...பகிர்வு நன்றி

    ReplyDelete
  3. இப்போதாங்க முதன் முறையா உங்க ப்ளாக் பக்கம் வரேங்க
    இனிமேலும் வர முயற்சிக்கிறேன் , நல்ல பணி , வணங்குகிறேன்

    ReplyDelete