Friday, November 27, 2009
முதல்வன்!
வாக்குண்டாம்,
நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம்,
மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
-ஔவையார்
பவள நிறத் திருமேனி கொண்ட,
தும்பிக்கை கொண்ட விநாயகன் பாதத்தில்,
மலரைக் கொண்டு
உடலை வருத்திக்கொள்ளாமல் துதிப்பவருக்கு,
நல்ல வாக்கு உண்டாகும்.
நல்ல மனசு உண்டாகும்.
இலட்சுமி பார்வை கிட்டிவிடும்.
மேனி நுடங்காது - உடலை வருத்திக்கொள்ளாமல்
துப்பார் திருமேனி - பவளம் போன்ற செக்கச் செவேல் நிறத் திருமேனி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment