Sunday, November 29, 2009

செல்வோம்!


உடாஅதும்,
உண்ணாதும்,
தம் உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார்,
கொடாஅது வைத்து
ஈட்டினாரிழப்பர்;
வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.

-செல்வம் நிலையாமை, நாலடியார்(10)



வானளாவிய மலைமுடிகளை உடைய நாட்டிற்குரிய தலைவனே!

தாம் நன்றாக உடுத்து அனுபவிக்காமலும்,
வயிறார உண்டு பயனடையாமலும்,
தம் உடலை வருத்திக்கொண்டு நல்ல தருமங்களைச் செய்யாமலும்,
யாசகர்களுக்குக் கொடுக்காமலும்,
பொருளைச் சேர்த்து வைப்பவர்கள்,

பற்பல மலர்களிலிருந்து தேனைக் கொண்டு வந்து,
கூட்டிலே சேமித்து வைத்து, பின்
அனைத்தையும் இழக்கும் தேனீயைப் போல,

தம் செல்வங்களையெல்லாம் ஒரே நாளில் உறுதியாக இழந்து விடுவார்கள்!

உய்த்தீட்டல் - உய்த்து + ஈட்டல் - கொண்டு வருதல் + சம்பாதித்தல்/சேகரித்தல்

No comments:

Post a Comment