தெரிவனநூல் என்றும்
தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே -
ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே
இகழ்ந்தெவரும்
கல்லா தனவும்
கரவு.
-நளவெண்பா(23)
நளன் அரசாண்ட நிடத நாட்டின் சிறப்பை விவரிப்பது.
இந்நகரத்தில்
எங்கும் தெரிவது - நல்ல நூல்கள்!
தெரியாதிருப்பது - வரிகள் பொருந்திய வளைகள் அணிந்துள்ள மாதர்களுடைய இடை!
எப்பொழுதுமே இல்லாதிருப்பது - இரத்தல் (அ) பிச்சையெடுத்தல்!
எல்லோரும் இகழ்ச்சியுடன் ஒதுக்கிக் கற்றுக்கொள்ளாதது - வஞ்சனை செய்தல்!
Tuesday, December 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கவிநயம் மிக்கப் பாடல். செல்வச் செழிப்பு, அறிவாற்றல், தேகநலம் மற்றும் தர்மநெறி நான்கையும் நான்கே வரிகளில் காட்டியிருப்பது அருமை. நன்றி
ReplyDelete