Sunday, December 13, 2009

துறவும், உணவும்

துயிற்சுவையும்
தூநல்லார் தோட்சுவையும்
எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவஎன் றெண்ணி -
அயிற்சுவையும் பித்துணாக்
கொள்பபோல் கொள்ப;
பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர்.

-நீதிநெறி விளக்கம்(86)

ஏனையரைப் போல, ஐம்புலன்களால் துன்பப்படாத தவ வலிமையை உடையவர்கள்,

தூக்கத்தின் இன்பமும்,
குற்றமில்லாத மாதர்களுடைய தோளைத் தவிழும் காம இன்பமும்,
மற்றுமுள்ள எல்லா இன்பங்களும்,
உண்ணுதல் இன்பத்தால் உண்டாகும் இயல்புடையன
என்று கருதி, உணர்ந்து,

பித்துப் பிடித்தவர்கள், சுவையை உணராது, உணவு கொள்ளுதலைப் போன்று
மிகக் குறைந்த அளவே உண்பர்.

No comments:

Post a Comment