ஆகாது எனினும்,
அகத்து நெய் உண்டாகின்,
போகாதெ றும்பு புறஞ்சுற்றும்;
யாதும்
கொடா அர் எனினும்,
உடையாரைப் பற்றி விடா அர்,
உலகத்தவர்.
-பேதைமை, நாலடியார்
ஒரு பாத்திரத்தின் உள்ளே நெய் இருக்குமானால்,
தமக்கு இல்லையென்றாலும் அந்தப் பாத்திரத்தை விட்டு அகன்று போகாமல்,
எறும்புகள் அதன் வெளிப்புறத்திலேயே விடாமற் சுற்றிக்கொண்டிருக்கும்.
அதுபோலவே,
செல்வம் உடையவரை, அவர் எதுவும் கொடாதவரே என்றாலும்,
உலகத்திலுள்ள பேதை மாக்கள்
அவர்களைப் பற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்; நீங்கவே மாட்டார்கள்!
Wednesday, December 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
இன்றுதான் வந்தேன் இந்த பக்கங்களில். மிகவும் சிறப்பான பணி இது. வாழ்த்துக்கள் மற்றும் எனது அன்பும்.
ReplyDelete