நாளென் செய்யும்
வினைதானென் செய்யும்
எனை நாடிவந்த கோளென் செயும்
கொடுங் கூற்றென் செயும்
குமரேசரிரு தாளும்,
சிலம்பும், சதங்கையும், தண்டையும்,
சண்முகமும், தோளும், கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-கந்தரலங்காரம்(38)
குமரக் கடவுளான முருகன் திருவடிகளும்,
சிலம்புகளும், சதங்கைகளும், தண்டைகளும்,
ஆறு திருமுகங்களும், பன்னிரு தோள்களும், கடம்ப மலர் மாலையும்
அடியேனுக்கெதிரில் வந்து தோன்றுமானால்,
கொடிய திதி, நட்சத்திரம் கூடிய நாட்கள் என்ன செய்யக்கூடும்?
அடியேனைத் துன்புறுத்துவதற்குத் தேடிவந்த நவக்கிரகங்கள் தான் என்ன செய்யக்கூடும்?
கொடிய இயமனால்தான் என்ன செய்ய முடியும்?!
குமரக்கடவுளைத் தரிசித்த மெய்யடியார்களை நாளும், கோளும், வினையும் வருத்தமுடியாது.
அதனால் "இன்பமே எந்நாளும் துன்பமில்லை."
கொடுங்கூற்று - மணமகனென்றும், இளைஞன் என்றும், ஒரு குலத்திற்கு ஒரு மைந்தனென்றும் பாராது கருணையின்றி உயிரைக் கவர்பவன். உயிரையும் உடலையும் கூறுபடுத்துவதால் கூற்றுவன் எனப்படுவான் இயமன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment