Thursday, December 3, 2009

அளவறிந்து வரி கொள்ளும் முறை

குடிகொன்று
இறை கொள்ளுங் கோமகற்குக்
கற்றா மடிகொன்று பால்கொளலும் மாண்பே;
குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோற்குக்
காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின்
மேலும் பல.

-நீதி நெறி விளக்கம் (29)


குடிமக்களை வருத்தி,
வரியைப் பெறும் அரசனுக்குக்
கன்றையுடைய கறவைப் பசுவின்
பாலை முற்றிலும் கறந்து கொள்ளுதலும் சரியாகப் படும்;
குடிமக்களைப் பாதுகாத்து,
வாங்க வேண்டிய வழியில் வரியை விதிப்போர்க்கு,
பெருமையுடைய செல்வம்
வெள்ளத்திற்கும் மேலாய்ப் பெருகி நிற்கும்.

பாலினைக் கன்றும், தேனினை வண்டும், கவர்தல் போலக் குடிமக்கள் இடர் அடையாமல் அருளோடும் அன்போடும்
அவரவர் தகுதிக்கேற்ப வரியைச் சிறிது சிறிதாக வாங்குதல் அரசனுக்கு (அரசுக்கு) அழகாம்.

No comments:

Post a Comment