Thursday, December 17, 2009

பெண்மை அரசு

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே

பெண்மை அரசு.

-நளவெண்பா(39)


நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனப்படும்
நான்கு குணங்களே நான்கு வகைச் சேனைகளாகவும்,

ஐம்புலன்களுமே நல்ல அமைச்சர்களாகவும்,

ஒலி முழங்கும் காற்சிலம்பே அழகிய முரசாகவும்,

வேற்படையும், வாளுமே கண்களாகக் கொண்டு,

தன் முகமாகிய நிலாவட்டக் குடையின் கீழாக
வீற்றிருக்கின்ற பெண்மை அரசின் தன்மையுடன்
விளங்குபவள் அவள் (தமயந்தி).

No comments:

Post a Comment