Tuesday, December 15, 2009

நல்லாரோடு சேர்தல்!

அறியாப் பருவத்து
அடங்காரோடு ஒன்றி,
நெறியல்ல செய்தொழுகி யவ்வும்,
நெறியறிந்த நற்சார்வு சாரக்,
கெடுமே
வெயின் முறுகப் புற்பனிப்
பற்றுவிட் டாங்கு.

-நல்லினம் சேர்தல், நாலடியார்(171)


நன்மை தருவது / தீமை விளைப்பது இதுவென
அறியாத இளம்பருவத்தில்,
அடக்கமில்லாத தீயவரோடு சேர்ந்து, திரிந்து செய்த
முறையில்லாத செயல்களும், குற்றங்களும்,

வெயில் அதிகமாகப்
புல்லின் நுனியிலேயுள்ள பனியானது,
புல்லைவிட்டு நீங்கிப் போவதுபோல,


நன்மையான வழிகளை மட்டுமே அறிந்த
நல்லவர்களுடன் சேர்ந்தால்,
நீங்கிப் போய்விடும்.

2 comments:

  1. நாலடிக்கு நாலடியில் விளக்கம்... அருமைங்க.

    ReplyDelete
  2. நல்ல எளிய பதிவு. ஆனாலும் நல்ல பலன் தரும். தொடருங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete